அனுமதியின்றி மரங்களை வெட்டிய போத்தீஸ்: தனி ஒருவனாக களமிறங்கிய பியூஸ் மானுஸ்

சேலம்-ஓமலூர் சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போத்தீஸ் கடையின் திறப்பு விழா கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, அந்த கடையின் முன்புறம் இருந்த 5-க்கு மேற்பட்ட மரங்களை போத்தீஸ் நிர்வாகம் வெட்டி அகற்றியது.

சேலம்-ஓமலூர் சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள போத்தீஸ் கடையின் திறப்பு விழா கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, அந்த கடையின் முன்புறம் இருந்த 5-க்கு மேற்பட்ட மரங்களை போத்தீஸ் நிர்வாகம் வெட்டி அகற்றியது.



இது தொடர்பாக, சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் போத்தீஸ் நிர்வாகம் எந்தவித அனுமதியும் இன்றி மரங்களை வெட்டி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும், இரவோடு-இரவாக வேர் பகுதி கூட தெரியாத அளவுக்கு அந்த நிறுவனம் மரங்களை முற்றிலுமாக அளித்து விட்டதாகவும், இதற்கு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 



இந்த புகார் தொடர்பாக, வருவாய்துறை அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், மரத்தை வெட்டிய போத்தீஸ் நிர்வாகத்துக்கு அபராதம் விதிப்பதாகக் கூறினார். 

ஐந்து மரக்கன்று 

தொடர்ந்து, மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் பியூஸ் மானுஸ் ஐந்து மரக்கன்றுகளை நடவு செய்தார். அந்த மரக்கன்றுகளை எந்த காரணத்தை கொண்டும் போத்தீஸ் நிர்வாகம் அகற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். 



மரங்களை அனுமதியின்றி வெட்டிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக 'தனி ஒருவனாக' குரல் கொடுத்த பியூஸ் மானுஸ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...