சீசன் முடிந்ததால் ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மூடல்

நீலகிரி: கோடை சீசன் முடிந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.


நீலகிரி: கோடை சீசன் முடிந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்த கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.



ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள நான்கு கண்ணாடி மாளிகைகளில், மலர் செடிகள், பெரணி தாவரங்கள், கள்ளிச் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்ணாடி மாளிகைகள் பழுதடைந்ததை அடுத்து, கோடை சீசனுக்குள் கண்ணாடி மாளிகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்காக, 2.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அவசர கதியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது, பெய்து வரும் மழையின் போது, கண்ணாடி மாளிகையில் பல பகுதிகள் ஒழுகி, தரை தளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கண்ணாடி மாளிகையை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியவில்லை. 

அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட பணியால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், ''கண்ணாடி மாளிகை பணி முழுமை பெறவில்லை. மலர் கண்காட்சியையொட்டி சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு தற்காலிகமாக திறக்கப்பட்டது. தற்போது, பணியை முழுமையாக மேற்கொள்ள கண்ணாடி மாளிகை மூடப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...