கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு சென்ற தி.மு.க.

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து இன்று சட்டசபைக்கு சென்றனர்.


சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்து இன்று சட்டசபைக்கு சென்றனர்.

துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காகத் தமிழக சட்டசபை இன்று கூடியது. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்க தி.மு.க.,வினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழலில், இன்று பேரவைக்கு வந்த தி.மு.க.,வினர் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், குட்கா விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்ப தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சபாநாயகர் பேச அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு மற்றும் சட்டசபை வெளியே போராட்டம் போன்றவற்றை நடத்த ஆயத்தமாக உள்ளதாகத் தெரிகிறது. 

இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...