நீலகிரியில் தோடர் இன மக்களின் கோயில்களை புதுப்பிக்கும் விழா

நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட சுமார் 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.


நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட சுமார் 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 



இவர்களில் மண்ணின் மைந்தர்களாகக் கருதப்படும் தோடர் இன மக்கள் வனம் சார்ந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். முந்தைய கால கட்டத்தில் மந்து என்று கூறப்படும் இவர்களின் வாழ்விடங்கள் சுமார் 165-ஆக இருந்தன. ஆனால், தற்போது அவை குறைந்து 65 மந்துகளில் மட்டுமே இவர்கள் வாழ்கின்றனர்.



ஒவ்வொரு மந்துகளிலும் இவர்களின் வழிப்பாட்டிற்கு அரை வட்ட வடிவிலான ஆபுல் எனப்படும் கோரை புற்களாலும், மூங்கில் ஓடை குச்சிகளாலும் கொண்டு இந்த கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோவில்கள் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இதற்கான இத்தகைய புதுப்பிக்கப்படும் நிகழ்ச்சி உதகையை அடுத்த் பகல் கோடு மந்தில் நடைபெற்றது.

இதற்கான ஆபுல் மற்றும் மூங்கில் ஓடை குச்சிகளை நெடுந்தொலைவில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில் இருந்து சேகரித்தும் முதுமலை வனப் பகுதியில் இருந்து மூங்கில்கள் இவற்றைக் கொண்டு கோவில்கள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தோடர் இன ஆண்கள் மட்டுமே கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு முடித்தனர்.



பின்னர் கோவிலுக்குள் பால், தயிர், வெண்ணெய் எடுத்தும் மூங்கில் மத்து, நெய் விளக்கு போன்றவற்றை தோடர் இன பூசாரிகள் பூஜைக்காக கோவிலில் வைத்தனர். இங்கு வேறு சிலைகளோ அல்லது மலர் மாலைகளோ கிடையாது. அனைத்து மந்துகளில் இருந்தும் வந்திருந்த தோடர்கள் கடவுளுக்கு நன்றி கூறிய பின் இவர்களின் பாரம்பரிய ஆடல் பாடலுடன் கோவில் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...