எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க கோரிக்கை

கோவை: தமிழகம் - கேரளா மாநில எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: தமிழகம் - கேரளா மாநில எல்லைகளில் நிபா வைரஸ் குறித்து சிறப்பு முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், "மாநில எல்லையில் மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோய்கள் கண்டறிய தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

நிபா வைரஸ் பற்றி கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனங்கள் அழிக்கப்படுவதால் அங்குள்ள விலங்குகள் இடப்பெயர்ச்சியில் ஈடுபடுகின்றன. இதனால், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், வனங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். மருத்துவ குணம் உள்ள மூலிகைச் செடிகளை கொண்டு சித்த மருத்துவம் மூலம் நிபா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும்," என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...