தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு ரத்து

தூத்துக்குடி: கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நீடித்து வந்த 144 தடை உத்தரவை இன்று மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

தூத்துக்குடி: கடந்த 5 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் நீடித்து வந்த 144 தடை உத்தரவை இன்று மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர்.

இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. அந்த தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 144 தடை உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியதால் அந்த தடை உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...