பயணி மறந்து விட்டுச்சென்ற விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை: கோவையில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் விட்டுச் சென்ற மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், சுமார் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் மாணவர்கள் சிலர் கடந்த 24-ம் தேதி பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு வீடு திரும்பிய செல்வராஜின் ஆட்டோவில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுள்ளார். அப்போது, இரண்டையும் சோதனை செய்த போது ஒரு பையில் மடிக்கணினியும், மற்றொரு பையில் விலை உயர்ந்த கேமரா என சுமார் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளது.



இது தொடர்பாக சி.ஐ.டி.யு., சங்கத்தில் தகவலை தெரிவித்த அவர், சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் (உளவு பிரிவு) சௌந்திரராஜனிடம் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் பொருட்களை ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயலை போலீசார் வெகுவாக பாராட்டியதோடு, உடைமைகளை இழந்தவர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...