பிரிக்கால் நிர்வாகத்தை கண்டித்து குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் மின்சாதன உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிர்வாகம் கடந்த சில வருடங்களாக தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக கூறி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையானோர் அத்தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் நிலையில், பெரும்பான்மை இல்லாத சங்கமாக நிர்வாகம் மாற்ற முயல்வதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், விடுப்பு நாட்களுக்கான (ஈட்டாத விடுப்பு நாட்கள்) தொகையை நிர்வாகம் தர மறுப்பதாகவும், ஆண்டுதோறும் தந்த கல்வி உதவித்தொகை மற்றும் அலவன்ஸ் தொகையை சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் கூறி தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் ரேஸ்கோர்ஸ் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தனியார் நிறுவன அதிகாரிகளுடன் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று மாலை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அழைத்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடப் போவதாகவும், இல்லையேல் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...