கோவையில் டிஜிட்டல் மனிதவளம் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் (வீடியோ)

கோவை: கோவையில் டிஜிட்டல் மனிதவளம் பற்றிய தென்மண்டல அளவிலான 2 நாள் கருத்தரங்கை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

கோவை: கோவையில் டிஜிட்டல் மனிதவளம் பற்றிய தென்மண்டல அளவிலான 2 நாள் கருத்தரங்கை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.

மனித வள மேம்பாடு மற்றும் தொழில்துறை உறவு மேம்பாடு, தொழிலாளர் மேம்பாடு ஆகிய துறைகளில் பணியாற்றும் மேலாளர்களின் கூட்டமைப்பான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்சனல் மேனேஜ்மென்ட் சார்பில் கோவையில் 2 நாட்கள் நடக்கும் தென்மண்டல அளவிலான கருத்தரங்கம் இன்று தொடங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.



இந்த கருத்தரங்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மனிதவள மேம்பாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியதாவது :- காவிரி தீர்ப்பு வந்தது மகிழ்ச்சி தான். ஆனாலும், இதில் வெற்றி தோல்வி என்பது இல்லை. காவிரி வழக்கில் இந்த தீர்ப்பு வருவதற்கு காரணம் அம்மா தான். அவர் தான் காவிரி பிரச்சனையில் போராடி தீர்வு கிடைக்காது, சட்ட ரீதியாக நாடினால்தான் தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனால்தான் தற்போது தீர்ப்பு வந்து உள்ளது, எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கீழடி அகழ்வாரய்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகிறது. கீழடியில் அகழ்வு வைப்பகம் உருவாக்க தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

Video: M.Balaji

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...