திருப்பூர்: பணிநிரவலை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: பணிநிரவலை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தொடக்கக் கல்வித்துறையில் பணி நிரவலை முழுமையாகக் கைவிட வேண்டும். 1997 ஆம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்ட 1:20 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு நிதிகள் தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.