கர்நாடகாவில் பா.ஜ.க., ஆட்சி: பீகார், கோவாவில் தொடங்கியது எதிர்கட்சிகளின் புரட்சி

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியமைந்த நிலையில், பா.ஜ.க., கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் பீகார், கோவா போன்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியமைந்த நிலையில், பா.ஜ.க., கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் பீகார், கோவா போன்ற மாநிலங்களில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பா.ஜ.க., 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், ம.ஜ.த., 37 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ம.ஜ.த., ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில ஆளுநர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி பா.ஜ.க., ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் செல்ல குமார் மற்ற கட்சி தலைவர்களுடன் நாளை அம்மாநில ஆளுநரை சந்திக்க உள்ளார். அப்படி ஆட்சியமைக்க அழைக்காத பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநர் மாளிகையில் தர்ணா நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 40 இடங்கள் கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17, பா.ஜ.க., 13, மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் வென்றது. சிறிய கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க., ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டீரிய ஜனதா தளம் மகா கூட்டணியை அமைத்து போட்டியிட்டது. அங்கு அதிகபட்சமாக ராஷ்டீரிய ஜனதா தளம் 80 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பாரதீய ஜனதா கட்சி 53 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டணி கடந்த அண்டு ஜூலையில் முடிவுக்கு வந்தது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்தது. அப்போது, ஆளுநர் இக்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், தனிப்பெரும்பான்மையான லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இப்போது, அதுவே கர்நாடகாவில் மாறுபட்டு உள்ளது.

இப்போது ஆளுநர் தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தளம் கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “நாங்கள் கர்நாடகாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒருநாள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். நாங்கள் எங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு பீகார் ஆளுநருக்குக் கோரிக்கை விடுக்கிறோம், கர்நாடகாவில் எப்படி தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதோ, அதன்படி பீகாரில் எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.

மேகாலயாவிலும் இதுபோன்ற கோரிக்கை எழத் தொடங்கி உள்ளது. தனிப்பெரும்பான்மையான கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என இம்மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்திக்க உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...