அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைப்பு: மேட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் பேச்சு

மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கார் மூலம் உதகை சென்றார். அப்போது, அவருக்கு மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கோவையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தொடங்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் துரிதகதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார். இதனைத் தொடர்ந்து, அவர் உதகைக்குப் புறப்பட்டு சென்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...