தோல்விகளே வெற்றிக்கு முதல்படி: பிளஸ்-2 தேர்வு தோல்விகளை கண்டு மாணவர்கள் பயக்கக்கூடாது

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையாமல் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனமுடைந்ததால் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கோவையில் பிரியா, ஏஞ்சலின் ஜெனிபர் என்ற மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மனவிரக்தியடையக் கூடாது என மூத்த மனநல மருத்துவர் என்.எஸ்., மோனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மாணவர்கள் பெரும்பாலும் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவர்கள் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மீது கோபத்தை காட்டாமல், அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், மாணவர்கள் இருக்கும் பகுதிகள் காற்றோட்டம் இருக்குமாறு ஏற்படுத்த வேண்டும். மேலும், விளையாட்டு போன்றவற்றால் அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

மேலும், மக்கள் அவர்களது தவறுகளை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது, நல்ல நிலையில் இருக்கும் பெரும்பாலானோர், தோல்விகளை சுவைத்தவர்களே. எனவே, இதனைப் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இளைஞர்கள் ஒரு களிமண்ணை போன்றவர்கள். அவர்களை நாம் வழிநடத்தி எதை உருவாக்க நினைக்கிறமோ..?, அதன் வடிவில் அவர்கள் உருவாவார்கள், என அவர் கூறினார்.

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு பெற்றோர்கள், சமூதாயம், மீடியாக்கள் மற்றும் அரசு ஆகியவை உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருக்கிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...