'கனா' பட இயக்குநரை நேரில் வாழ்த்திய நடிகர் விஜய்

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் ‘கனா’ படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜாவை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து '3' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக தற்போது வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், தயாரிக்க இருக்கும் முதல் படத்துக்கு ’கனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கபாலியின் ‘நெருப்புடா’ பாடலை எழுதிப் பாடிய அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். இயக்குநர் அருண்ராஜா காமராஜா, சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக நினைக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் தந்தை என்ற கதைக்கருவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் தந்தையாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் மகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதைக்கண்ட நடிகர் விஜய் படத்தின் இயக்குநரை பாராட்டியுள்ளார். விஜயின் வாழ்த்து தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் அருண்ராஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...