குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண்கள் பெற்று சாதனை

கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.


கோவை: குழந்தைத் தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட மாணவர் 1,093 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த 8 பேர் சமீபத்தில் மீட்கப்பட்டனர். அதில் ஏழு பேர் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.



அவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்களில் எஸ். தரணிதரன், இ. ஜெகதீஷ், வி.லாவண்யா, பி.ராஜேஸ்வரி, வி.தினேஸ், எல்.சொப்னில் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குழந்தை தொழிலாளியாக இருந்த மீட்கப்பட்ட தரணிதரன் 1,093 மதிப்பெண் பெற்ற நிலையில், மருத்துவம் படிக்க போவதாகவும் அதற்காக நீட் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், "குடும்ப சூழ்நிலை காரணமாக 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிக்கு சென்றேன் அதன் பின் குழந்தை தொழில் ஒழிப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றேன். மருத்துவம் படித்து இருதய நோய் நிபுணராக வரவேண்டும் என்பதே எனது ஆசை. நீட் தேர்வு எழுதியுள்ளேன். என்னைப் போன்ற குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு கல்வி பயில வேண்டும்." என்றார்.

Video: A.Vignesh

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...