கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்: காங்கிரசுடன் கைகோர்த்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பா.ஜ.க., பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பா.ஜ.க., முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 70-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பா.ஜ.க., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.,வின் வெற்றி உறுதியானது. இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க., ஆட்சியமைப்பதை தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஆட்சியமைக்கப்போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தேவகவுடாவும் சந்தித்து பேசுகின்றனர். இது கர்நாடக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு, ஆட்சியமைப்பதற்கு தேவையான 112 இடங்களை பா.ஜ.க., பெறவில்லை எனில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...