கார்ப்பரேட்டுகளுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கூடாது என வலியுறுத்தல்

கோவை: கார்ப்பரேட்களுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை: கார்ப்பரேட்களுக்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் சி.ஐ.டி.யு., தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருபகுதியாக நேற்று பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடகோவை சிந்தாமணி முன்புறம் இருந்து துவங்கிய பேரணியில், ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர். வடகோவையில் துவங்கிய பேரணி பூமார்க்கெட், தியாகி குமரன் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜவீதி தேர்நிலைத் திடலில் முடிவடைந்தது. 



முன்னதாக, பேரணியில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். எரிபொருள் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும். பொது போக்குவரத்தை சீர்குலைத்து கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்ட திருத்தம் மேற்கொள்வதை மத்திய அரசே கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்யவதை அனுமதிக்காதே உள்ளிட்ட முழக்கத்தோடு பேரணியில் பங்கேற்றனர். 

இதனைத்தொடர்ந்து, ராஜவீதி தேர்நிலைத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் அ.சவுந்திரராஜன் உரையாற்றினார். இப்பேரணியில் ஆட்டோ சம்மேளன தலைவர் எம். சந்திரன், பொதுச்செயலாளர் எம். சிவாஜி, பொருளாளர் ஏ. பழனி, துணை பொதுச்செயலாளர் பி.கே. சுகுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...