உதகையில் தொடங்கியது 16-வது ரோஜா கண்காட்சி : சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கும் படைப்புகள்

நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, உதகையில் ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 30 ஆயிரம் சிவப்பு ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட இந்தியா கேட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



சிவப்பு மற்றும் ஊதா நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம் உருவம் கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது.



கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறை சார்பில் 5,000 சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள படகு, மதுரை தோட்டக்கலைத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காளை, ஈரோடு தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயில் போன்றவை இந்த ரோஜா கண்காட்சிக்கு மெருகூட்டும் வகையில் உள்ளது. 



நாளை வரை நடக்கும் இந்த ரோஜா கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....