செல்வசிந்தாமணி குளத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: வீடுகளுக்குள் புகுந்தது தண்ணீர்..!

கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.


கோவை: செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், நேற்று இரவு ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கோடை வெயில் அதிகரித்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தனன் குளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகிய 5 குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.



இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரம் பகுதியிலுள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி குளத்தின் ஷட்டர்களை திறந்து விட்டனர். மேலும், செல்வபுரம் பகுதியிலிருந்து உக்கடம் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயில் உள்ள அடைப்பினை அதிகாரிகள் சரி செய்தனர்.



இதனால், கால்வாயை ஒட்டி அமைந்துள்ள அசோக் நகர் மற்றும் சேத்துமா வாய்க்கால் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்கள் நிரம்பிவரும் நிலையில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தண்ணீரை திறந்து விட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்ததுள்ளது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையால் முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததே, இது போன்ற நிலை ஏற்படக் காரணம்." என்று குற்றம் சாட்டினர்.

Video: Laxman

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....