பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  



வங்கிகள் சீர்திருத்தத்தை அனுமதிக்கக் கூடாது, தனியார் வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டும், போதிய அளவு வங்கிகளில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வங்கி கூட்டமைப்பினர் சார்பில் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமை அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாரக் கடன்களை வசூலிக்க வேண்டும், ஊதிய உயர்வு தொடர்பாக காலம் தாழ்த்தாமல் சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...