சமூக வலைதளங்களை அதிர வைக்கும் 'காலா' படத்தின் பாடல்கள்

பா. இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணையதளத்தில் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணையதளத்தில் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டார். 

ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது. 

படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. காலா படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 8 பாடல்களும் உள்ளன. இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், பாடல்கள் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று ‘காலா’ படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். 

தற்போது, இந்தப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் மும்பையைப் பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...