உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் : விஷ்ணுபிரியாவின் தந்தை கோவையில் பேட்டி

கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தந்தை ரவி உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


கோவை : டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரது தந்தை ரவி, உயிரே போனாலும் வழக்கை விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். 

வழக்கு தொடர்பாக, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி-க்கு, நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதில், "விஷ்ணுபிரியா தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., கைவிட உள்ளது. இந்த வழக்கை வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ., தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மே, 9-ல், நீதிமன்றத்தில் ஆஜராகி தெரியப்படுத்த வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விஷ்ணுபிரியாவின் தந்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

வழக்கு விசாரணையின் போது, ரவி சி.பி.ஐ., அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அடுத்த வாய்தாவில் எதிர்ப்பிற்கான காரணத்தை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரவி, "என் உயிரே போனாலும் இந்த வழக்கை கைவிடமாட்டேன். நியாயம் பெறுவேன்." என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் அனிதா ரவி கூறுகையில், "இந்த வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை. சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை முழுமையாகப் படித்த பின் ஆட்சேபனைகளைத் தெரிவிப்போம்." என்றார்.

Video: Laxman

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....