கோவை அரசு மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறையா..?: நீருக்காகப் பாட்டில்களுடன் அலையும் பொதுமக்கள்

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குடிதண்ணீருக்காக காலி தண்ணீர் பாட்டில்களுடன் அலையும் அவலநிலை நீடிப்பதற்கு தீர்வுகாண மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குடிதண்ணீருக்காக காலி தண்ணீர் பாட்டில்களுடன் அலையும் அவலநிலை நீடிப்பதற்கு தீர்வுகாண மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

கோவை அரசு மருத்துவமனை

கோவை - திருச்சி சாலையில் 18.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு கோவை உட்பட நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில், தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வெளிநோயாளிகளும், 1,700 முதல் 2,000 ஆயிரம் பேர் வரை உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் நம்பி வரும் இந்த மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை என்பது அனைவரையும் முகம் சுழிக்க செய்கிறது.



தண்ணீர் பற்றாக்குறை இல்லை..?

கோவை அரசு மருத்துவமனையில் குடிதண்ணீருக்கான இணைப்புகளில், பல்க் இணைப்பு 3-ம், சாதாரண இணைப்பு 2-ம் என மொத்தம் 5 இணைப்புகள் இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவமனையின் அனைத்து கட்டிடங்களிலும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்காக குடிநீர் வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் தண்ணீர் கிடைக்காமல் காலி பாட்டில்களுடன் தண்ணீர் தேடி அலையும் காட்சியை அரசு மருத்துவமனைக்கு சென்றாலே நாம் காணலாம். கூட்டம் கூட்டமாக அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் தண்ணீரை தேடும் அவலங்கள் நமது கோவை அரசு மருத்துவமனையில் உண்டு. இவர்கள், அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டினில் இருந்து குடிநீர் பிடித்து செல்கின்றனர். அதேபோல, உச்சி வெயில் நேரங்களிலும் தண்ணீரை தேடி கேண்டீனுக்கு செல்கின்றனர். இரவில் கேண்டின் மூடிவிடுவதால் அவசரத்திற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.



இதில், "அதிகாரிகள் குடிநீருக்காக பல திட்டங்கள், பல இணைப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்". அப்படி இருந்தால் பொதுமக்கள் ஏன் குடிநீர் இன்றி தண்ணீர் பாட்டில்களுடன் அலைகிறார்கள்..? என்ற கேள்வியும் எழுகிறது.



தண்ணீர் குடிப்பதின் அவசியம்:

நீர் என்பது மனிதனின் உடலுக்கு வேண்டிய, நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு திரவம். நமது உடலின் எடையில் நீரின் பங்களிப்பு 55-60 சதவிகிதம். உணவு இல்லாமல் 2 மாதங்கள் இருக்கலாம். ஆனால், நீரில்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. நம் உடல் உறுப்புக்கள் சரிவர இயங்கவும் நீர் அத்தியாவசியமானது. குறைந்த அளவு நீர் உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும். அதேபோல, நீரானது நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானது. அதை எளிமையாக கிடைக்க கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும்.

அதேபோல, மருத்துவர்களால் பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2½ லிட்டர் தண்ணீரும், தாய்ப்பால் கொடுக்கும் போது குறைந்தபட்சம் 3 லிட்டர் நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அறிவுரைகள் கொடுக்கும் மருத்துவர்கள் இருக்கும் மருத்துவமனையிலேயே தண்ணீர் தட்டுப்பாடு என்பதே வேதனையிலும் வேதனையாகும். தாய் சேய் அவசரகால மருத்துவ மையத்தில் சுடுதண்ணீர் தரும் நவீன இயந்திரத்தை 2012-ல்,  பி.ஆர். நடராஜன் எம்.பி., தாய்மார்களுக்காகவும் அவர்களின் உறவினர்களின் பயன்பாட்டிற்காக அவரது நிதியியல் இருந்து அமைத்து கொடுத்தார். ஆனால், அந்த சுடு தண்ணீர் இயந்திரம் தற்போது செயல்படாமல் துருப்பிடித்து உள்ளது.

இது குறித்து கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறியதாவது :- கோவை அரசு மருத்துவமனையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்ற செய்தி வேதனை அளிக்கிறது. இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, கோவை அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2012-ல் தாய் சேய் அவசரகால மருத்துவ மையத்தில் சுடுதண்ணீர் தரும் நவீன இயந்திரத்தைப் பொருத்தினேன். இதற்காக எனது நிதியில் ரூ. 3 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இயந்திரம் முறையாக பராமரிக்காததால் பழுதடைந்துள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெயில் காலத்தில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ள சூழலில் குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைமை இருப்பது ஏழை நோயாளிகளை சிரமப்படுத்துகிறது, எனத் தெரிவித்தார்.



இதுகுறித்து கோவை அரசு மருத்துவ கல்லூரியின் தலைவர் டாக்டர். அசோகன் கூறியதாவது :- நமது மருத்துவமனையில் நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரும் உறவினர்களுக்கும் தேவையான குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பிரசவ வார்டு அருகே உள்ள சுடுதண்ணீர் இயந்திரம் பழுதால் செயல்பாடு இல்லாமல் உள்ளது. நாங்கள் பொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். விரைவில் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நமது மருத்துவமனையில் நல்ல தண்ணீர் தேவையான அளவு கிடைக்கிறது. இந்த நீரை பயன்படுத்தி 45 ஆப்ரேசன் தியேட்டர் மேஜையில், தினமும் 150 முதல் 200 ஆப்ரேசன்கள் நடைபெறுகிறது.

அதேபோல, ஒரு நாளைக்கு 30 டெலிவரி, அதில் 15 சிசேரியன் ஆப்ரேசன் நடைபெறுகிறது. இது அனைத்திற்கும் நல்ல தண்ணீர் தான் பயன்படுத்துகிறோம். அதேபோல தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குரோமோ வார்டு அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைத்து கொடுத்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால் கடந்த 10 நாட்களாக குரோமா வார்டு அருகில் உள்ள குடிநீர் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை, என்றார்.



இது குறித்து நோயாளியின் உறவினர் சந்தோஷ் பேசுகையில், "இந்தக் குழாயில் திடீரென தண்ணீர் வரும். திடீரென வராது. அடிக்கடி ரிப்பேர் ஆகும் என நினைக்கிறேன். அதனால், யாரும் இங்க தண்ணீர் பிடிக்கிறது இல்லை. எல்லாரும் கேண்டின்லையும், தான் குடிக்க தண்ணீர் பிடிக்கிறார்கள். ரொம்ப சிரமம் தான்," எனப் பேசிக்கொண்டே நகர்ந்தார்.

இந்த தண்ணீர் தட்டுப்பாடு குறித்து நாம் மேற்கொண்ட கள ஆய்வில் நோயாளிகளும், உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் இல்லாததை ஒத்து கொள்கின்றனர். ஆகவே, மருத்துவமனை அதிகாரிகள் குடிநீர் இணைப்புகள் குறித்த செயலற்ற புள்ளிவிவரங்களை கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களின் தேவையான தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Video: Laxman, M.Balaji

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...