திருப்பூரில் அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா கார் மோதியதில் தி.மு.க உறுப்பினர் பலி

திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூர் தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). அப்பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவர் அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தனது நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோபி - குன்னத்தூர் சாலை செட்டிகுட்டை பிரிவு என்னுமிடத்தில் எம்.பி. சத்தியபாமா-வை கோவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர அவரது காரை ஓட்டுநர் செந்தில்குமார் வேகமாக இயக்கி வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அருண்குமார் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...