பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர் - மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில்

கோவை : பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு முகமை மேற்கொண்டு வரும் அவதூறு பிரச்சாரங்களை சட்ட போராட்டம் எதிர்கொள்வோம் என்று அந்த அமைப்பின் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறியுள்ளார்.

கோவை : பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு முகமை மேற்கொண்டு வரும் அவதூறு பிரச்சாரங்களை சட்ட போராட்டம் எதிர்கொள்வோம் என்று அந்த அமைப்பின் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- 

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து எதிர் கட்சிகளின் குரல்வளைகள் நசுக்கப்படுவதும், எதிர் கருத்துள்ளவர்கள் முடக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நல்ல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை போன்ற அரசு அமைப்புகள் இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அரசியல் நோக்கங்களை நிறைவு செய்யும் கருவிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றது. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பாப்புலர் ஃப்ரண்ட் மக்கள் மத்தியில் தொடர்ந்து தோலுரித்து வருகின்றது. இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ள இந்து அமைப்புகள் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவதூறு பிரச்சாரங்களை தேசம் முழுவதும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடை செய்வதற்கான முயற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

சசிகுமார் கொலை 

கோவையில் நடைபெற்ற சசிகுமார் கொலை வழக்கை கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் மீது களங்கம் ஏற்படுத்த என்.ஐ.ஏ திட்டமிட்டு வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு முக்கிய கொலை வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ள நிலையில் கோவை சசிகுமார் வழக்கை மட்டும் NIA விசாரணை செய்வது திட்டமிட்டு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தும் சதியாக உள்ளது.

அதே நேரத்தில் சசிகுமார் கொலைக்கு முன்பாக ஹக்கீம் என்ற முஸ்லிம் இளைஞர் கொலை செய்யப்பட்டதும், சசிகுமார் கொலைக்கு பின்பு அப்துர் ரஜாக் என்பவர் கொலை செய்யப்பட்டதும் இதுவரை எந்த புலனாய்வு அமைப்புகளாலும் விசாரணை செய்யப்படாமல் உள்ளது. 

இதற்கு முன்பு கேரளாவில் ஹாதியா வழக்கை மையப்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு அவதூறு பிரச்சாரங்களை முறியடித்ததைப் போல் தமிழகத்திலும் தற்பொழுது NIA-வின் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறு முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட போராட்டம் மற்றும் மக்கள் போராட்டங்கள் மூலம் எதிர்கொண்டு வெற்றிபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...