சாலை விபத்தில் புள்ளிமான் உயிரிழப்பு: வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த கோவை வனத்துறை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி புள்ளிமான் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி புள்ளிமான் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள சாலை என்பதால் இங்கு புள்ளிமான்கள், காட்டுயானைகள்,மற்றும் பிற வனவிலங்குகள் ஒரு வனத்தை விட்டு மற்ற பகுதிக்கு இடம் பெயரும் போது இந்த சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். எனவே வாகன ஒட்டிகள் இரவு நேரத்தில் மிக கவனமாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரி அருகில் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது, ஊட்டியிலிருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கி விசபட்ட புள்ளிமான் சம்பவ இடத்திலேயே இறந்தது.



மேலும், அங்கு நிற்காமல் சென்ற வாகனத்தை ஓடந்துறை வன சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது, காரில் அடிபட்டிருப்பது தொடர்பாக சோதனை செய்தனர். விசாரணையில் புள்ளிமான் மீது மோதியது தெரியவந்தது. அதேநேரம் புள்ளிமான் சாலையில் இறந்து கிடக்கும் தகவலும் வன ஆர்வலர் மூலமாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி வந்த கோவையை சேர்ந்த கணேஷ்குமார் என்பவரது மகன் நவநீத் மீது, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வன உயிரின குற்ற வழக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சதீஷ் உத்தரவுப்படி, காரை அஜாக்கிரதையாக ஓட்டி புள்ளிமான் உயிரிழக்க காரணமாக இருந்த நவ்நீத்திற்கு ரூ. பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சம்பவம் நடைபெற்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்கு பதிவு செய்து சிறைக்கு செல்ல நேரிடும் என்று நவநீதத்தை வனத்துறை எச்சரித்து அனுப்பினர்.

பின்னர், தேக்கம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் இறந்த புள்ளிமானை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தார்.

தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் சாலைகளில் அதிகமாக இருப்பதால் இந்த சாலை மார்க்கமாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் மித வேகததில் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...