பிரதமருக்கு 2,000 கடிதங்கள் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

நதி விவகாரத்தில் நீதி வேண்டி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியான நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஓரிரு நாள்களாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். நேற்று பள்ளியில் பயிலும் 2000 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், "பிரதமர் அவர்களே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளனர்.



மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி அதில் தங்கள் முகவரியையும் குறிப்பிட்டு எழுதினர். தொடர்ந்து எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரித்து அனைத்து மாணவர்களின் சார்பில் 20 மாணவர்கள் மட்டும் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...