மது குடிக்க பணம் தராத நண்பரை அடித்துக் கொன்றவர் கைது

திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் தங்கி கூலி தொழில் செய்து வந்தார். 

இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள நல்லாற்றங்கரையில் தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் வேல்முருகன் சடலமாக கிடந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இச்சம்பவம் குறித்து அவர் பணியாற்றிய இடம் மற்றும் அவர் தங்கியிருந்த பகுதிகளில் விசாரித்தனர். அப்போது, சுபாஷ் என்பவருடன் வேல்முருகன் கடைசியாக சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுபாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததால் அருகில் இருந்த கட்டையால் அடித்து தாக்கி கொலை செய்ததாக சுபாஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை வேலம்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். 

மது அருந்த பணம் தராததால் நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...