இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்

கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2005-ம் கோவை கணபதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் காணாமல் போனார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 2013-ம் ஆண்டு சவுந்தரராஜன், சிவவிஷ்ணு ஆகிய இருவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெர்னாண்டஸை, கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக சரவணம்பட்டி போலீசார் மாற்றினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று விசாரணைக்கு வந்த போது, சவுந்தரராஜன், சிவவிஷ்னு ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 3,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...