கோவில் பிரசாதம் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



மேட்டுப்பாளையத்தில் உள்ள நாடார் காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று பொறிச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாங்கி உண்டனர். இந்நிலையில், அவல் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு நேற்று நள்ளிரவு முதலே உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரச்சனை அதிகரித்து வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் இவர்களுக்கு (Food Poison) எனப்படும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதத்தில் கலக்கப்பட்ட நெய் காலாவதியாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மேலும் சிலரும் இதுதொடர்பான உடல் நலக்கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற தொடர்ந்து வந்தபடி உள்ளனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை எந்தக் காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...