காவிரி விவகாரம் : கோவை ரயில்நிலையத்தை முடக்கிய அரசியல் கட்சிகள்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள், போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்தனர்.

2-ம் நடைமேடையில் வந்த ரப்திசாகர் விரைவு ரயிலை மறித்த போராட்டக்காரர்கள், ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தி.மு.க.வின் மகளிர் அணியினர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தி.மு.க.,வின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தெரிவித்தார். இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...