திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு போராட்டம் : தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், தமிழக பெரு நிறுவனங்கள், தொழில் வளாக உரிமையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பேரமைப்போடு இணைந்த ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள வேண்டுகோளில், 3-4-2018 அன்று (நாளை) ஒரு நாள் கடையடைப்புக்கு ஓரணியில் திரண்டு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே, விவசாயமும் அழிந்து வணிகர்களின் வாழ்வாதாரமும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சிதைந்து போயுள்ள நிலையில், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக அறிவிக்கும் போராட்டங்களுக்கும், பேரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்ந்த அமைப்புகள் தார்மீக ஆதரவு அளித்தாலும், ஒவ்வொரு முறையும் கடையடைப்பு என்பது சாத்தியமில்லை என்பதனால், அனைத்து அரசியல் அமைப்புகளும், தமிழக பெருநிறுவனங்கள் தொழில்வளாக உரிமையாளர்கள் தங்களின் ஒருமித்த ஆதரவை பேரமைப்பு அறிவித்துள்ள 3-4-2018 அன்று (நாளை) நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு அளித்து கடையடைப்பு மாபெரும் வெற்றியடைய உதவிடுமாறு இருகரம் கூப்பி வேண்டுவதாக அறிவித்தார்.

இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நலன்கருதி மட்டுமே அன்றி எந்த தனிப்பட்ட லாப நோக்கத்திற்காகவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...