கோவை : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், கோவை வ.உ.சி. மைதானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்டா பகுதியில் காவிரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தேனி பகுதியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அரசியல் நோக்கத்திற்காக ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவையில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நாளை முதல் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதனால், நகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து, கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மைதானம் பிரதான போராட்ட அரங்காக மாறிவிட்டது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கோவையின் பங்கு பெரும் அதிகம். இந்தப் போராட்டத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற எழுச்சிப் படையைக் காண கோவை மாநகர போலீசார் தயாராக இல்லை. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வ.உ.சி. மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புகளை அமைத்து வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.