காவிரி விவகாரம் : கோவை, திருப்பூர், நீலகிரியில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை, நீலகிரி மற்றும் திருப்பூரில் தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளும் விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை, நீலகிரி மற்றும் திருப்பூரில் தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளும் விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் உட்பட தி.மு.க. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவையைப் பொறுத்தவரையில் பீளமேடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை பீளமேடு பகுதியில் எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், பீளமேடு பகுதியில் தி.மு.க.வினா் 2 போ் தீக்குளிக்க முயற்சி செய்தனர். மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. வட்ட கழக செயலாளர் முருகேசன் மற்றும் சிங்கை சதாசிவம் இருவரும் தற்கொலை முயற்சி செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வ.உ.சி. மைதானம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

மேலும், காந்திபுரத்தில் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



வால்பாறையில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



திருப்பூரில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைவரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். 



நீலகிரியில் ஏடிசி சுதந்திர திடல் முன்பாக திரண்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காவிரி மேலாண்மை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...