நீலகிரி: கனமழையால் வீடுகளை இழந்து 16 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தர வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி மாவட்டம் உபதலை ஊராட்சிக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு பெய்த மழையில் சுமார் 10 வீடுகள் சேதமடைந்ததையடுத்து அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், முகாமில் இருந்தவர்கள் வாடகை வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மாற்று இடம் வழங்குவதாகக் கூறி 16 ஆண்டுகளாகியும், இதுவரை வழங்காததால் மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அலைந்து மனு அளித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அப்போது, தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நியாய விலை அட்டைகளை திருப்பிக் கொடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.