கோடை காலம் தொடங்கிய நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் தென் இந்திய பகுதிகளில் குறிப்பாக ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வழக்கத்தை விட வெப்பம் குறைவாக இருக்கும். ஏனெனில், அங்கு பருவ மழைக்கான காற்று உருவாகும். அதே நேரத்தில், வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த ஆண்டுகளை விட வெப்பம் கடுமையாக இருக்கும்.
1901-ம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில், கடந்த 2016-ம் ஆண்டில்தான் வெப்பம் மிக கடுமையாக இருந்தது. இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலம் பாலோடியில் அதிக அளவாக 123 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கடுமையான வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.