வால்பாறை : வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் சென்ற பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை சீசன் தொடங்கிவிட்ட காரணத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலாப் செல்லத் தொடங்கியுள்ளனர். நிலவிவரும் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைத்தார் போல, சுற்றுலாப் பயணிகள் மலைப் பிரதேசங்களுக்கு சென்று இளைப்பாறி வருகின்றனர்.
அதோடு, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் வால்பாறை மற்றும் உதகை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. குழு-குழுவென இருந்த வால்பாறையில் நேற்று லேசான மழை பெய்தது. கோடையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பெய்த இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, இன்றும் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஆங்காங்கே உள்ள சிறு அருவிகளில், நீர் வழிந்தோடத் தொடங்கியுள்ளது. இது அங்கு சுற்றுலாப் சென்ற பயணிகளை குதூகலமடையச் செய்துள்ளது. தற்போது அந்த அருவிகளில் வழிந்தோடும் நீரில் விளையாடி இன்பச் சுற்றுலாவாக கொண்டாடி வருகின்றனர் சுற்றுலாப் பயணிகள்.