ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டி: காஸ்மோ வில்லேஜ் அணி சாம்பியன்

கோவை: கோவை மாவட்ட கிரிகெட் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டியில் காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்றது.

கோவை: கோவை மாவட்ட கிரிகெட் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டியில் காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்றது.

கோவை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ராமகிருஷ்ணா மில்ஸ் டி20 போட்டிகள் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் கோவை நைட்ஸ் அணி, காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை எதிர்த்து விளையாடியது. முதலில் ஆடிய கோவை நைட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் அணியை எதிர்த்து டெவில் ஸ்டோரகர்ஸ் அணி விளையாடியது. முதலில் ஆடிய ஜாலி ரோவர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெவில் ஸ்டோரகர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இறுதியில், தொடரின் சிறந்த பேட்ஸ்மென் விருது காஸ்மோ வில்லேஜ் அணியின் வீரர் சுகேந்திரனுக்கும், சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது டெவில் ஸ்டோரகர்ஸ் அணி வீரர் முருகானந்தத்திற்கும் வழங்கப்பட்டது. இதேபோல, காஸ்மோ வில்லேஜ் அணியின் வீரர் சரத்குமார் சிறந்த ஆல் ரவுண்டருக்கான விருதையும், சக அணி வீரர் சரவணனுக்கு சிறந்த விக்கெட் கீப்பருக்கான விருதையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை ரத்தினம் கல்லூரி முதன்மை அதிகாரி மாணிக்கம் வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...