வைகோ நடைபயண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு

நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.



விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும். வேதனையும் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து வைகோ மேடையில் பேசியதாவது:- இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என பல முறை கூறியிருக்கிறேன். தீக்காயமுற்ற இந்த தம்பியின் உடல் முழுவதும் எரிந்திருக்கிறது. இயற்கை அன்னை எப்படியாவது இந்தத் தொண்டரை காப்பாற்றித்தர வேண்டும். ரவியை நம்பி அவரது குடும்பம் உள்ளது. வேதனையோடு எனது கடமையை நடைபயணத்தை துவக்குகிறேன். இவ்வாறு அவர் பேசும் போது நா தழு, தழுக்க கண்ணீர் விட்டார் வைகோ. 

இந்த உரைக்குப் பின்னர், வைகோ தனது நடைபயணத்தை தொடங்கினார். வைகோ மதுரையில் இருந்து கம்பம் வரை இந்த நடைபயணத்தை நடத்துகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கின்றனர். 10 நாட்களுக்கு நடைபயணம் நடக்கிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...