பரோல் முடிவதற்கு முன்பே சிறைக்கு திரும்பினார் சசிகலா

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம. நடராஜன் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து, கணவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கோரினார்.  அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்து கடந்த 20-ந்தேதி தஞ்சாவூருக்கு புறப்பட்டார். அங்கு கணவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சசிகலா பரோலில் வந்து 10 நாட்கள் ஆன நிலையில், இன்று தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார். சசிகலாவுடன் தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு வரை டி.டி.வி. தினகரனும் உடன் சென்றார். சுமார் 4 மணியளவில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு திரும்பினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...