கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தமிழக - கேரள எல்லைப்பகுதியான ஆனைகட்டி அருகே துமனூர் பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதுரை (58). இவர் நள்ளிரவில், காட்டு வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு புதர்களில் மறைந்திருந்த ஒற்றை யானையை அவர் கவனிக்கவில்லை. இந்த நிலையில், திடீரென யானை தனது தும்பிக்கையின் மூலம் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால், பலத்த காயமடைந்த பெரியதுரையை, அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.