கோவை: கோவையில் இன்று முதல் 2 நாட்களுக்கு தூரல் மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம் இரவு நேரங்களில் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும். திருப்பூர், ஈரோடு, கோவையில் 2 நாட்களுக்கு தூரல் மழையும், கோத்தகிரியில் நல்ல மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. குன்னூர், உதகையில் வானம் மேகமூட்டத்துடன் தூரல் பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரையில் காற்றின் வேகம் 10-ல் இருந்து 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.