கோவையில் டிவிசன் அளவிலான கிரிக்கெட் லீக் போட்டிகள்

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் கழகம் சார்பில் மூன்றாவது மட்டும் இரண்டாவது டிவிசன் ஆட்டங்கள் கோவையில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் கழகம் சார்பில் மூன்றாவது மட்டும் இரண்டாவது டிவிசன் ஆட்டங்கள் கோவையில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்றது.

ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற 2-வது டிவிசன் ஆட்டத்தில் ராஜசேகர் கார்த்திக் நினைவு கிளப் அணியும், விங்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய விங்ஸ் அணி 49.5 ஓவரில் 262 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விவேக் பீட்டர் (113), சுஜய் (58), ராகுல் (31) ரன்களும் எடுத்தனர். பின்னர், ஆடிய ராஜசேகர் கார்த்திக் நினைவு கிளப் அணியினர் 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக ஜானகிராமன் (32) ரன்னும், முத்து 40 ரன்னும் ஜனார்த்தனன் (80) எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் வெற்றி பெற முக்கிய பங்காற்றினர்.

3-வது டிவிசன் ஆட்டங்கள் சி.ஐ.டி மற்றும் பி.எஸ்.ஜி. மைதானத்தில் நடைபெற்றது. சி.ஐ.டி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி.ஐ.டி. அணி ஆர்.கே.எஸ் கல்வி நிலைய அணியுடன் மோதியது. இதில், முதலில் ஆடிய 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய ஆர்.கே.எஸ். கல்வி நிலைய அணி 45.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சபரிநாத் (95), அழகப்பன் (31) எடுத்தனர். பி.எஸ்.ஜி. மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் அணி, 101 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் அணியை வீழ்த்தியது. 

4-வது டிவிசன் ஆட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை எதிர்த்து விஜய் கிரிக்கெட் கிளப் அணி மோதியது. முதலில் ஆடிய விஜய் கிரிக்கெட் கிளப் அணி 35.1 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வீரர்கள் பழனிசாமி (33), அரவிந்தன் 33 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணி 22.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

5-வது டிவிசன் ஆட்டம் சக்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் மாக்மா அணியை எதிர்த்து ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி விளையாடியது. முதலில் ஆடிய மாக்மா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் திலீபன் (46), மோகன் (34), அனிருத் (33), ஸ்ரீ ராம் (31) ரன்கள் எடுத்தனர். பின்னர், விளையாடிய ஸ்ரீ அணியினர் 35.3 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...