கோவை: காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன.

அந்த யானைகளின் பணிக்காலம் முடிந்து அவற்றை திரும்ப அனுப்பும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதற்காக, சாடிவயல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வனத்துறையினரும் ஒன்று கூடி, சுஜய் மற்றும் பாரி என்ற யானைகளுக்கு விடை கொடுக்கும் நிகழ்வை நடத்தினர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "பாரி என்ற யானை முதுமலையில் உள்ள தேக்கம்பட்டி முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது. சுஜய் என்ற யானை தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவற்றிற்கு பதிலாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து அழைத்து வரப்படுகின்றன." என்றார்.