கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை செய்து பட்டியலை வெளியிடாததற்கும், அலுவலகத்திற்கு தேர்தல் அதிகாரி வராததைக் கண்டித்தும் தி.மு.க.வினர் சமையல் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 



தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி ஒன்றியத்திற்குட்பட்ட எண்: 414 விருமாண்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான 11 இயக்குநர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், தி.மு.க.,வினர் 4 பேரும், காங்கிரசில் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு இருபது பேர் இறுதி செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இன்று காலை இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிடாமலும், தேர்தல் அதிகாரி வராமல் காலம் தாழ்த்தி அ.தி.மு.க.,வினருக்கு சாதகமாக செயல்படுவதாகக் கூறி வங்கி வளாகத்திலேயே சமையல் செய்து தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...