கோடை தீ விபத்துகளை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி

கோவை : கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் ஒத்திகை செயல்முறை விளக்கம் கோவையில் நடைபெற்றது.

கோவை : கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் ஒத்திகை செயல்முறை விளக்கம் கோவையில் நடைபெற்றது. 

எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பீளமேடு தீயணைப்புத்துறை வீரர்களின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் முறை செய்து காட்டப்பட்டது. வீட்டில் இருக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. தீ விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் யுக்திகளையும் தீயணைக்கும் வீரர்கள் செய்து காட்டினர்.

மேலும், கோடை காலத்தில் தீ விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு விரைவாக தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்ட பகுதி கோவை சர்வதேச விமான நிலையம் அருகில் இருப்பதால், மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...