"சிதிலமடைந்த மரங்கள் விழும் முன்னே அகற்றுங்கள்.!" : பொதுமக்கள் கோரிக்கை

கோவையில் சாலையோரம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிதிலமடைந்து விழும் தருவாயில் உள்ள மரங்களை அகற்ற கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவை : கோவையில் சாலையோரம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிதிலமடைந்து விழும் தருவாயில் உள்ள மரங்களை அகற்ற கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவையில் சில பகுதிகளில் குறிப்பாக பாலசுந்தரம் சாலையில் உள்ள வாகை மரம் ஒன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த மரம், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே போல் ஆர். எஸ்.புரம் அருகில் வெளிநாட்டு வகை மரம் உள்ளது. இதே போல் பல இடங்களில் மரங்களின் நிலையை அறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருதமலை அடிவரத்தில் 150 வயது மதிக்கதக்க ஆலமர கிளை ஓன்று இரவு நேரம் மக்கள் கூடும் இடத்தில் முறிந்து விழுந்தது. அந்த கிளையே பெரிய மரம் போல் இருந்தது. இரவு நேரம் என்பதால் மக்கள் அதிகம் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து இயற்கை ஆர்வலரான ஓசை சையத் கூறுகையில், "மரக்கன்றுகளை நற்று எவ்வாறு அதனை பாரமரிக்கின்றோமோ, அதே போல் மரங்களின் ஆயுள் காலம் முடியும் போது அதனை அகற்றுவதும் நம் கடமையே. மக்கள் மத்தியில் மரங்கள் மீதான தவறான எண்ணம் வந்துவிடக் கூடாது. மனிதனை சார்ந்தே மரங்களும் உள்ளன. உதாரணத்திற்கு தென்னை மரங்களின் கீழே நிற்கும் போது பெரும்பாலும் இளநீர், தேங்காய்கள் மற்றும் மட்டைகள் விழுவதில்லை. சற்று நகர்ந்து சென்றால் விழும் இதனை நானே உணர்ந்துள்ளேன். அரசு அதிகாரிகள் மரங்கள் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை அகற்ற வேண்டும்." என்றார்.

"சாலை விரிவாக்கம் போன்றவற்றால் ஏற்கனவே நிறைய மரங்களை இழந்துவிட்டோம் அங்கு சாலையோரம் புதிய மரங்கன்றுகளை நட வேண்டும். அதேபோல் சிதிலமடைந்த மரங்களை கண்டறிந்து அதனை அகற்றி அங்கேயும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்." என்று சமூக ஆர்வலர் அருள்ராஜ் தெரிவித்தார்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விழும் தருவாயில் உள்ள மரங்கள் குறித்து கண்காணித்து வருகிறோம். பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், விரைவில் சிதிலமடைந்த மரங்கள் அகற்றப்படும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...