விவசாய நிலத்தில் தண்ணீர் எடுத்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை

திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கல் குவாரிக்கு கொண்டு செல்வதைத் தட்டிக் கேட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



 

மடத்துக்குளம் அருகே உள்ள கருப்பசாமிபுதூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து கல் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலமாக இரவு பகலாக தண்ணீர் எடுத்து செல்ப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்ற விவசாயி தண்ணீர் எடுத்துச் சென்ற லாரியை மடக்கி தட்டிக்கேட்டார். 

அப்போது அந்த நிலத்தின் உரிமையாளர் செல்வபேபி என்பவர் லாரி டிரைவரின் உதவியுடன் தங்கவேலையும் அவரது மகன் சின்னதிரையையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் சின்னதுரையின் மண்டை உடைந்தது. மேலும், தங்கவேலு-வின் தாய்க்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...