கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கு: லாலுவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கால்நடை தீவன ஊழலின் 4-வது வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பீகாரில் கடந்த 1980 மற்றும் 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கால்நடை தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி இரசீதுகள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஐந்து வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன. இந்த ஊழல் அனைத்தும், காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு, பீகார் முதலமைச்சர்களாக இருந்தபோது நடந்தவையாகும். இதுவரை மூன்று வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தும்கா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி எடுத்ததாகத் தொடரப்பட்ட நான்காவது ஊழல் வழக்கில், கடந்த 19-ம் தேதியன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்திருந்தார். லாலுவுடன் அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதில், லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 லட்சமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...