ஈரோட்டில் இன்று தி.மு.க., மாநாடு: மேளதாளங்களுடன் புறப்பட்ட தி.மு.க. தொண்டர்கள்

ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

மேட்டுப்பாளையம்: ஈரோட்டில் நடக்கும் தி.மு.க., மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு சென்றனர்.

ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் ஈரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் காரமடை நால்ரோடு பகுதில் இருந்து மேளதாளங்களுடன் சுமார் 50 வாகனங்களில் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க., ஆதரவு பெண்கள் ஆர்வத்துடன் முளைப்பாரி எடுத்து வந்து மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனர். மாநாட்டிற்கான வாகனங்களை மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் கொடி அசைத்து வழி அனுப்பிவைத்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...